ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
ஆகஸ்ட் 27 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டக்குழு சார்பில் நேற்று 26 8 2026 காலை 10 மணி அளவில் சந்தனூர் மேடு கிராமத்திலும் மாலை 5 மணி அளவில் மெனசி கிராமத்திலும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் R.மல்லிகா, வட்ட குழு உறுப்பினர் விவேகானந்தன், கிளைச் செயலாளர்கள் பொன்னுசாமி, மாதையன், மூத்த தோழர் வஞ்சி மற்றும் நடராஜ், அமுதா, தனமா,சின்னசாமி, சாமிகண்ணு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.