கர்நாடக மாநிலத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நாள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விறுவிறுப்பான பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பெங்களூருவில் வாகனத்தில் சென்றபடி பிரசாரம் செய்தார். பிரதமர் வாகன பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியதோடு, அவருக்கு ஆரவாரமான வரவேற்பை அளித்தனர். பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது..,

இதுபோன்ற அன்பை இதுவரை எங்கும் பார்த்ததில்லை. பெங்களூருவில் கிடைத்த வரவேற்புக்கு இணையில்லை. இன்று காலை நான் பொது மக்கள் தரிசனத்தை பெங்களூருவில் பெற்றேன். பெங்களூருவில் நான் பார்த்ததை வைத்து ஒன்றை தெரிந்து கொண்டேன்.” “இந்த தேர்தலில் மோடியோ அல்லது பாஜக தலைவர்களோ அல்லது நம் வேட்பாளர்களோ போட்டியிடவில்லை. மாறாக இங்கு கர்நாடக மக்கள் தான் பாஜக வெற்றிக்காக போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்த தேர்தல் கட்டுப்பாடு முழுமையாக மக்கள் கையில் இருப்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது.” “இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக பாகல்கோட் மக்களுக்கு மூன்று லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பகல்கோட்டை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்தமாக கான்கிரீட் வீடு பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட பலன்கள் பாகல்கோட் மக்களுக்கு சென்றடைந்துள்ளது,” என்று தெரிவித்து இருக்கிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *