உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ் தாய் நகர் பகுதியை சார்ந்த கருமாதிக்கொட்டகை மற்றும் அங்கன்வாடிக்கு பல வருட காலமாக கழிப்பிடம் இல்லை. இது சம்பந்தமாக உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ, ரோட்டரி கிளப் தலைவர் சகோதரர் அனிபால் நேருவிடம் மக்கள் நலம் கருதி இக்கட்டிடங்களை அமைத்து தரும்படி கேட்டுக்கொண்டார்.இதையடுத்து இக்கட்டிடங்கள் ரோட்டரி கிளப் மூலம் கருமாதி கொட்டகையில் நவீன கழிப்பிடம் மற்றும் குளியல் அறையும், அங்கான்வாடியில் நவீன கழிப்பிடமும் குளியல் அறையும் கட்டும் பணி நடக்கிறது .இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ஆரோக்கியராஜ், மீனவர் அணி துணை அமை ப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் காந்தி மற்றும் சங்கரநாராயணன், கார்த்திக், பவி ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளச்சாராய விற்பனை: அண்ணாமலை கண்டனம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. உடனடியாக தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *