மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு 100 நாட்கள் தொடர் வேலை வழங்க வனத்துறை உதவியுடன் நாற்றுப்பண்ணை அமைக்கும் திட்டம் முதல்வர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அமைச்சர் பெருமக்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 8 இலட்சம் மனித நாட்களுக்கான ஒப்புதல் மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் பல்வேறு உத்திகளின் அடிப்படையில் புதுவை மாநில வனத்துறையின் தொழில் நுட்ப உதவியுடன் இணைந்து நாற்றுபண்ணைகள் அமைத்தல், சமூக காடு வளர்ப்பு திட்டம் (மரக்கன்றுகள் நட்டு பாரமரித்தல்) மற்றும் புதுவை மாநிலத்திற்கு உகந்த வேலை வாய்ப்பினை ஏற்படுத்தகூடிய பல்வேறு பணிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி மூலம் 100 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட 108 கிராம
பஞ்சாயத்துக்களிலும் நாற்றுபண்ணைகள் அமைக்க வட்டார வளர்ச்சி துறை மூலம் பணிகள் வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக, புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அலுவலகத்திற்குட்பட்ட தொண்டமாநத்தம் கிராம பஞ்சாயத்தில் முதல்வர் ரங்கசாமி முதல் நாற்றுபண்ணை திட்டம் விதைகளை தூவி துவக்கிவைத்தார். இந்த விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். குடிமை பொருள் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாய். சரவணன் குமார் முன்னிலை வகித்தார்.

இதனைத் தொடர்ந்து தொண்டமாநத்தம் கிராமத்தில் அன்சாரி அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற துறை நாற்றுபண்ணை துவக்க விழாவின் போது ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதுவை முதல்வர் மகளிர் கூட்டமைப்புகளுக்கு வழங்கினர் சுய உதவி குழுவினர்க்கு வங்கி நேரடிகடன் ரூ.1,06,20,000 வழங்கப்பட்டது.வட்டார அளவிலான கூட்டமைப்பில் இருந்து பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பிற்கு நேரடி கடனாக ரூ.60,00.000மும் சமூதாய மூலதன நிதி மற்றும் நலிவுற்றோர் வறுமை குறைப்பு நிதி ரூ.1,50,000 நிதியும் உற்பத்தியாளர் குழுவிற்கு துவக்கநிதியாக ரூ.1,00,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில திட்ட இயக்குநர் சத்திய மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அதிகாரி வாய்சாக் பாகி அவர்கள் வரவேற்புரையாற்றினார் மற்றும் நிறைவாக இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி நன்றியுரை ஆற்றினார் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *