துறையூர் அக்-10
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொல்லப்பட்டி நியாயவிலை கடை எண் 13GP022PI-ல் பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நேற்று (அக்-10) நடைபெற்றது.

திருச்சி மாவட்ட உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களையவும், குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்ட வழங்கல் அலுவலரின் ஆலோசனையின் படி, துறையூர் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி தலைமையில் துறையூர் அருகே உள்ள உள்ள கொல்லப்பட்டி நியாய விலை கடை எண் 13GP022PI-ல் (10/10/2026) இன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை பொது விநியோகத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் , திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ,கடை மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்பட சுமார் 18 மனுக்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் பெறப்பட்டது.

இந்த மனுக்களில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வும், சில மனுக்கள் பரிசீலனை செய்தும் தீர்வு காணப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி தெரிவித்தார். இம்முகாமில் உணவு வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் சிவகாமி, மின்கல இயந்திரம் இன்ஜினியர் ஆனந்த் மற்றும் விற்பனையாளர் அறிவு சுதா ஆகியோர் முகாம் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் அலைச்சல் இன்றி மிக சுலபமாக தங்களது குடும்ப அட்டை சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடிகிறது என்று குடும்ப அட்டைதாரர்கள் தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *