மக்கள் பணிச்செம்மல் விருது: மாவட்டத் தலைவர் A.A. ஆறுமுகத்துக்குப் பாராட்டு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணை இலக்கிய வட்டம் சார்பில், திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு மாவட்டத் தலைவர் A.A. ஆறுமுகத்துக்கு, அவரது மக்கள் பணியைப் பாராட்டி ‘மக்கள் பணிச்செம்மல்’ விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை அண்ணாமலையார் திருக்கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வ. தனுசு வழங்கி, A.A. ஆறுமுகத்தைப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் மாநிலத் தலைவர் மா. சின்ராஜ், அருணை இலக்கிய வட்டத்தின் தலைவர் பேச்சருவி கு. சபரி, பொருளாளர் ந. ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

மக்கள் நலனுக்காக ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட இந்த விருது, சமூகப் பணியில் தொடர்ந்து ஈடுபட ஊக்கமளிப்பதாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *