சத்தியமங்கலம்: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகே ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
எஸ்.ஜி.எம். பூக்கடை கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில், பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தால் அப்பகுதியில் உற்சாகமான சூழல் நிலவியது.