அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் முன்னாள் குடியரசு தலைவர் மரியாதைக்குறிய டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்களின் 95வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு பேரமைப்பு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் செயலாளர் முனைவர் கதிர் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்
ஆர்டிசி வணிக குழுமம் ஏ ஆர் ஹைதர்அலி பேரமைப்பு அமைப்புச் செயலாளர் அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் டாக்டர் அப்துல்கலாம் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் சி குமரன் சிறப்புரையாற்றினார்
பின்பு வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை முதல்வர் மற்றும் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகிகள் மரக்கன்றுகளை நட்டனர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் என் ரமேஷ் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் க கொளஞ்சிநாதன் பேரமைப்பு பொருளாளர் கொவி புகழேந்தி பேரமைப்பு துணை தலைவர் புலவர் சி இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
நிகழச்சியில் ஷோபனா பன்னீர்செல்வம் மங்கையர்கரசி செந்தில்குமார் ராஜாராம் இலுப்பூர் கே ராமசாமி அன்புசித்திரன் தமிழ்ச்செல்வன் துரை செல்வராஜ் சஹானா காமராஜ் தமிழ் களம் இளவரசன் இரா திலகவதி அறிவானந்தம் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர் பேரமைப்பு இணை செயலாளர் செல்லபண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார் மருத்துவமனை சார்பில் செவிலியர் கண்காணிப்பாளர் அபிராமி மேலாளர் ஸ்மித் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்