துறையூர் அக்-16
திருச்சி மாவட்டம் துறையூர் ஆர்த்தி மஹாலில் 16-10-2026 அன்று தமிழ்நாடு அரசின் மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நல்வாழ்த்துக்களுடன் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து 120 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வளையல், பட்டுப்புடவை , பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை தொகுப்பை வழங்கி மலர்கள் தூவி வாழ்த்தினார்.
இதில் வட்டாட்சியர் சித்ரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மலர்கொடி , துணை வட்டாட்சியர் ராமு,வீரமச்சான்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஷ்மி, கண்காணிப்பாளர் பழனிசாமி, மேற்பார்வையாளர்கள் ஜோதி,சரோஜா,கீதா மற்றும் தமிழக வெற்றிக் கழகம் திருச்சி வடக்கு மாவட்ட இணை செயலாளர் பா.மதன், நகர செயலாளர்கள் வினோத்குமார் (தெ), சூர்யா (வ), ஒன்றிய செயலாளர்கள் தர்மா (கி), ரவிச்சந்திரன் (வ),சுதாகர் (தெ),
சிவப்பிரகாசம் (மே),உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த் (தெ), குணசேகரன் (வ),
சண்முகம் (ம), பேரூர் கழக செயலாளர்கள் முத்துகிருஷ்ணன் (உப்பிலியபுரம்), கண்ணன் (எ)கிருஷ்ணமூர்த்தி (பாலகிருஷ்ணம்பட்டி) மற்றும் நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றி பேரவை நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்