அரியலூர் செந்துறை ரோட்டில் உள்ள தொமுச ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
முன்னதாக புதுப்பிக்கப்பட்ட சங்க விளம்பர பலகையை தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் ஆர் மகேந்திரன் மாவட்ட கவுன்சில் செயலாளர் டி வி அன்பழகன் ஆகியோர் சங்க பெயர் பலகை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்
அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி பூஜை செய்யப்பட்டு ஆட்டோக்கள் ஊர்வலம் சிறப்பாக நடந்தது ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் பூபதி சரவணன் பொதுச்செயலாளர் கே பெரியசாமி பொருளாளர் எஸ் காமராஜ் சிமெண்ட் தொழிலாளர் சங்கம் சின்னையன் அந்தோணி உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்