துறையூர் சிவன் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி நடவடிக்கை

துறையூர் அக்டோபர்-22 திருச்சி மாவட்டம் துறையூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ நந்திகேஸ்வரர் சிவாலயம் உள்ளது.இந்த கோயிலுக்கு சொந்தமான இடங்களை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாக புகார் வந்ததை அடுத்து துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் நேற்று (21-10-2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் நேர்ந்து விட்ட கோவிலுக்கு சொந்தமான பசுக்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு விவரங்களை கோவில் ஊழியரிடம் கேட்டறிந்தார்.பிரதோஷம் மற்றும் விழா காலங்களில் சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் நடக்கிறது. இதனால் கிழக்கு பகுதியில் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து கோவிலின் தென்புறம், கோயில் கிழக்கு புறமுள்ள பழுதடைந்த தேர் மற்றும் அதன் சுற்றி ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ள இடங்களை பார்வையிட்டு கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியர் சித்ராவிடம் கூறினார்.


அப்பொழுது வருவாய் ஆய்வாளர் இளவரசி, விஏஓ வசந்த மலர், தலைமை நில அளவையர் வெங்கடாசலம் நில அளவையர் ராம்குமார், மற்றும் கோவில் ஊழியர்கள் தவெக நிர்வாகிகள் தளபதி வினோத், சூர்யா, தர்மா, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *