சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் காளிப்பட்டி ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம் காளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகம் எண் 281 குக்கல் பட்டி பாகம் எண் 282 இரண்டாவது வார்டு சித்திக் குள்ளனூர் மேல் சித்திக் குள்ளனூர் 283 மூணு நாலாவது வார்டு ஆகியவை சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது

மொத்த வாக்காளர்கள் 1143 இதுவரை பூர்த்தி செய்யப்பட்டு வந்த விண்ணப்பங்கள் 850 வரவேண்டிய வாக்காளர் திருத்த படிவங்கள் 293 உள்ளது. படிவங்களை 26.11. 25.க்குள் வாக்காளர்கள் மையத்தில் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் கணினியில் ஏற்றப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாமை மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி வாசுதேவ பிரபு வட்டார வளர்ச்சி ரேவதி ஆகியோர் பார்வையிட்டு படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து பெற வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

மேலும் 3,4, பி எல் ஒ லதா 2 வார்டு கனகா 3 வார்டு செண்பகவள்ளி மற்றும் கோவிந்தராஜ் பி எல் எப் தவமணி மகளிர் சுய உதவி குழு பார்வதி ஆகியோர் படிவத்தை வாக்காளர்களுக்கு பூர்த்தி செய்து உதவி வருகின்றனர். உடன் மேச்சேரி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி காளிப்பட்டி ஊராட்சி செயலாளர் மணிமுத்து உதவியாளர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *