தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் .சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பாலக்கோடு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் / மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கு.த.சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.மலர்விழி, வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அ.ராமன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை துணை இயக்குநர் து.மீனாட்சி சுந்தரம், துணை ஆட்சியர் பயிற்சி லார்சன் இஸ்ரேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சித்ரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.