காயல் பட்டிணம்: நவ 27
இஸ்லாமிய இளைஞர் படு கொலை சம்பந்த பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கன்னியாக்குமரி மாவட்டம்,திங்கள் நகர்,பகுதியை சேர்ந்த ஷமீம் என்கிற நபரை ஒட ஒட விரட்டி மிகவும் கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்ட சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.மேலும் துபாயில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்த ஷமீம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ்க்கும் சிறு தகராறு ஏற்பட்ட காரணத்தை கொலை வெறியை மனதில் வைத்து கொண்டு முகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து இந்த படுகொலை நிகழ்த்தி ய இச்சம்பவம் கண்டிக்க தக்க செயலாகும்.
மேலும். ஷமீமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினற்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும். உயிரிழந்த ஷமீம் குடும்பத்திற்கு நிவாரணம் ரூ 50 லட்சம் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.மேலும் முகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறு தகராறுக்கே கொடூரமாக படு கொலை செய்கிறார்கள் என்றால் இவர்கள் பணத்திற்க்காக மீண்டும் அப்பாவி மக்களை கொலை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?
எனவே : இஸ்லாமிய இளைஞர் ஷமீம் கொலையில் சம்பந்த பட்ட முகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும். ஆகவே இனி வரும் காலங்களில் இது போன்ற இஸ்லாமியர் மீதான படு கொலை, தாக்குதல் ஏதேனும் சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.