தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகளின் நலன் மருத்துவம் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி காலாண்டிற்க்கான கட்டாய்வு மேற்கொண்டு அங்கு உள்ள சிறைவாசிகளிடம் அவர்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்
இந்த ஆய்வின் போது சிறைத்துறை துணைத் தலைவர் மதுரை சரகம் முனைவர் ஆ முருகேசன் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் சார்பு நீதிபதி ஆ. பரமேஸ்வரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கௌதம் பெரியகுளம் சார் ஆட்சியர் தவலேந்து மதுரை சிறைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா இணை இயக்குனர் மருத்துவ பணிகள் அன்புச் செழியன் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ. பாண்டி உட்பட இதர அலுவல் சார் மற்றும் அலுவல் சார பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்