தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
கீழவீராணம் ஊராட்சியில், வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும்.

கீழவீராணம் ஊராட்சியில் கீழவீராணம் கிராமத்தில் இதரபிரிவினருக்கு மயானம் உள்ளது.

சுடுகாட்டு மயான பாதை பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. சரிசெய்து தரவேண்டும் கீழவீராணம் கிராமத்தில் முஸ்லீம் சமுதாயத்திற்க்கு மையவாடி நன்மைக்கூடம் இல்லாத நிலையே உள்ளது அதனை அமைத்து தர வேண்டும்

ஏந்தலூரில் எரியூட்டும் அறை பழுதடைந்த நிலையில் உள்ளது சரிசெய்து தரவேண்டும்

கீழவீராணம் ஊராட்சி கீழவீராணம் கிராம த்தில் ஆதிதிராவிடர் மக்களின் மயானப்பாதையும், மயானமும் பிரச்சனையில் உள்ளது.

அதனை தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் கீழவீராணம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்களுக்கு பயன்படுத்தும் மயானம் மற்றும் மயான பாதை தனிநபர் பெயரில் உள்ளது (சர்வே எண்-404). மேலும் அங்கு அனைவர் பயன்பாட்டிற்க்கு ஏற்ற வகையில் ஏற்படுதுதல் ஏரியூட்டு அறை மற்றும் நன்மை கூடம் அமைத்து தரவேண்டும்.

கீழவீராணம் ஊராட்சி நாச்சியார்புரம் கிராமத்தில் மயானமும் மயான பாதையும் தனிநபர் பெயரில் (பட்டா- 2694,859) உள்ளது.
அந்த இடத்தில் நன்மைக்கூடம் அமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிபிட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *