நோபல் நாயகர் இரவீந்திரநாத் தாகூர் வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கி
எட்டாத உயரம் கவிதையால் அடைந்தவரே !

பாரிஸ்டர் பட்டம் நீங்கள் பெறவில்லை !
பெற்று இருந்தால் நோபலுக்கு வாய்ப்பில்லை !

நோபல் பணத்தால் உருவானது பல்கலைக் கழகம் !
நோபல் பரிசுக்குப் பெருமை பெற்றுத் தந்தவரே !

உலக நாடுகள் பல பயணித்த முதல் கவிஞரே !
உலகத்தை உற்று நோக்கி தந்த கவி தேனாறு !

பாடலாசிரியர் கவிஞர் ஓவியர் இதழாசிரியரே !
பன்முக ஆற்றலில் தனி முத்திரைப் பதித்தவரே !

காந்தியடிகளுக்கு தேசப்பிதா பட்டம் தந்தவரே !
காந்தியடிகள் விரும்பிய இலக்கிய வேந்தரே !

தன்னம்பிக்கையின் சின்னம் விவேகானந்தருடன்
தன்னலமற்ற நட்பு கொண்ட நல்லவரே !

வாலாபாக் படுகொலையைக் கண்டிக்கும் விதமாக
வழங்கிய சர் பட்டதை திருப்பி வழங்கியவரே !

நாட்டின் விடுதலைக்கு முன்பாகவே மறைந்திட்டாலும்
நாட்டின் விடுதலைக்குப் பின்பும் நினைக்கப்படுபவரே !

இந்தியா வங்காளம் இரண்டு நாட்டின் தேசிய கீதமானது
இனிய கவிதைகளுக்கு சாகாவரம் தந்தவரே !

அரசு விழாக்கள் அனைத்திலும் உமது பாடல் !
அரசும் மக்களும் நினைக்காத நாளே இல்லை !

தோன்றின் புகழோடு தோன்றுக வள்ளுவரின் வழி

தோன்றி புகழ் பல பெற்றவரே வாழ்க பல்லாண்டு !

உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் கவிஞர் .இரா .இரவி

கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர்
கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர் !

நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர்
நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர் !

புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர்
போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர் !

தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர்
தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார் !

டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக
சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர் !

காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும்
காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர் !

தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர்
பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர் !

குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து
குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர் !

கவிஞர் ஓவியர் நடிகர் எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலோடு
கவிதைகளில் மட்டும் தனிப்பெரும் முத்திரைப் பதித்தவர் !

இயற்கையை நேசிப்பதில் இயற்கையோடு ஒன்றானவர்
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றானவர் தாகூர் !

குழந்தைப் பருவத்தில் பள்ளியைச் சிறையாக நினைத்தவர்
குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் குரல் தந்தவர் !

மாலைப் பாடல்கள் எனும் முதல் நூலின் மூலம்
மலை என கவிதை மாமலை என உயர்ந்த கவிஞர் தாகூர் !

வங்கத்து நாவல் எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியிடம்
வாழ்த்தும் பாராட்டு மழையும் மலர் மாலையும் பெற்றவர் !

ஆடம்பரத்தை என்றும் விரும்பாத எளிமையின் சின்னம்
அன்பு நெறியை அகிலத்திற்கு உணர்த்திய நல் அன்னம் !

தாய்மொழிப் பற்று மிக்கவராகத் திகழ்ந்தவர் தாகூர்
ஆங்கில மோகம் அகற்றுக அன்றே உரைத்தவர் தாகூர் ழ்!

சிலை வழிபாடு வேண்டாம் என்று சொன்னவர் தாகூர்
சக மதங்களைச் சாடுவது தவறு கூறியவர் தாகூர் !

விலங்குகள் பறவைகள் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காதீர்
வனங்களையும் மரங்களையும் ரசிக்க வைத்தவர் தாகூர் !

பிற நாட்டின் மீது பகை வளர்க்கும் தேசபக்தி
பிற்போக்குத்தனமானது என்று சாடியவர் தாகூர் !

மூடப் பழக்கங்களை வெறுத்துப் பகுத்தறிவை நாடியவர்
மூச்சாகத் தாய் மொழியை நேசிக்கச் செய்தவர் !

ஆங்கிலம் இத்தாலி எனப் பன்னாட்டு மொழிகளில்
அகிலம் முழுவதும் பரவியது தாகூரின் படைப்பு

அயல்நாடுகளில் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால்
அற்புதக் கவிஞர் தாகூர் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்றனர் !

உடலால் இவ்வுலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் தாகூர் !


தாகூர் ! கவிஞர் இரா .இரவி !

மறுமலர்ச்சி நாயகர்
அரசியலை வெறுத்தவர்
தாகூர் !

கவிஞர்களின் கவிஞர்
எழுத்தாளர்களின் எழுத்தாளர்
தாகூர் !

கல்வியில் சீர்திருத்தம்
செயல்படுத்திக் காட்டியவர்
தாகூர் !

நரபலியைச் சாடி
கவிதை கதை வடித்தவர்
தாகூர் !

ஓவியமாக கவிதையும்
கவிதையாக ஓவியமும் படைத்தவர்
தாகூர் !

உன்னை நீ அறிவாய்
உலகிற்கு உணர்த்தியவர்
தாகூர்

விளக்குகளை ஏற்றும்
ஆசிரிய விளக்கு
தாகூர்

தேசிய கீதங்கள் இயற்றியவர்
தேசியக் கவியாகத் திகழ்ந்தவர்
தாகூர் !

பதினான்காவதாகப் பிறந்து
பார் போற்றும் கவிரானவர்
தாகூர் !

மாதிரிப் பள்ளி தொடங்கி
முன் மாதிரியானவர்
தாகூர் !

இந்திய வரலாறு எழுதி
உலக வரலாறு ஆனவர்
தாகூர் !

யுகங்கள் கடந்து வாழும்
யுகம் வென்ற கவி
தாகூர்!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *