தென்காசி

தென்காசி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் உத்தரவின்படி வரும் ஜீன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியர் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்ட இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆய்வில் பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை. போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 368 பள்ளி வாகனங்களில் 171 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 149 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 22 வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ் கருவி, தீயணைப்பு கருவி, இருக்கைகள் எண்ணிக்கை. முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம், கை ப்ரேக் ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

மேலும் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகள், 2012 ல் கூறப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டு ள்ளதா என்றும், தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்ற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 171 பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு உடல் மற்றும் கண்பரிசோதனைகள் செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் காவல்துறை துணைக் கண்காணிப்பார் நாகசங்கள். தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ். கண்ணன், மாவட்ட தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு துணை அலுவலர் பிரதிப் குமார், முதன்னமக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட கல்வி அலுவலகம் தனியார் பள்ளிகள் கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *