தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த யானை உடல்நலக்குறைவால் இறந்தது

தென்காசி மாவட்டம் புளியரை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை அணை உடல் நல குறைவினால் மயங்கி விழுந்து இறந்தது.

தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வனப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள பகவதிபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை அந்தப் பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி நடமாடியது‌ அதனைத் தொடர்ந்து பூலாங்குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள தோப்புகளிலும் சுற்றி திரிந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் பகவதிபுரம் பகுதியில் நடமாடிய ஒற்றை யானையை தீவிரமாக தேடி அலைந்தனர். அப்போது ஒரு மாந்தோப்புக்குள் அந்த யானை சோர்வான நிலையில் நீண்ட ஒரே இடத்தில் நின்றதை பார்த்தனர்.

வழக்கமாக காட்டு யானை ஊருக்குள் புகுந்தால் மனிதர்களை கண்டதும் ஆக்ரோஷமாக தப்பி ஓட முயற்சிக்கும் மேலும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக வருவதைக் கண்டால் அங்கிருந்து வனப்பகுதிக்குள் வேகமாக ஓடிவிடும்.

ஆனால் இந்த காட்டு யானை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரை கண்டும் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அதே இடத்தில் நீண்ட நேரம் நின்றது. இதனைப் பார்த்து வனத்துறையினர் இந்தக் காட்டு யானைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் மிகவும் சோர்வாக காணப்படுகிறது

என்பதை புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு தேவையான தண்ணீர் மற்றும் தர்பூசணி பழம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அருகில் வைத்தனர். அதனை தின்ற யானை அதன் பிறகும் அந்த மிகவும் சோர்வாக காணப்பட்டது இந்நிலையில் திடீரென அந்த யானை மயங்கி விழுந்தது.

உடனடியாக வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர். அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மயங்கிய நிலையில் கிடந்த யானைக்கு ஊசி மூலம் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அந்த யானை கண் விழிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் அங்கேயே இருந்து அந்த யானையின் உடல் நிலையை கண்காணித்து அவ்வப்போது சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அந்த யானை நேற்று காலையில் மருத்துவர்கள் பரிசோதித்த போது மயக்க நிலையிலையே அந்த யானை உயிரிழந்தது தெரியவந்தது.

இது பற்றி தகவலறிந்த தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர் முருகன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்துவிட்ட யானையை உடற்கூறாய்வு செய்தனர். அதன்பின் அந்தப் பகுதியில் குழி தோண்டி யானையை புதைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *