PONDICHERRY

September 6 V C A & P C A தினத்தை முன்னிட்டு இன்று FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY & CONSUMER CONFEDERATION OF INDIA ‘CCI’, சார்பாக இன்று JAWAHARLAL NEHRU GOVERNMENT HR.SEC. SCHOOL. (NEDUNGADU) பள்ளியில் துணை முதல்வர் அவர்கள் தலைமையில் நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோர் சட்டங்கள் குறித்தும், தரமற்ற பொருட்கள், போலி பொருட்கள் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் FEDCOT INDIA CONSUMER MOVEMENT மாநிலத் தலைவர் S. திருமுருகன் வழக்கறிஞர்& நோட்டரி அவர்கள் CONSUMER PROTECTION IN DIGITAL ERA என்ற தலைப்பில் நுகர்வோர் சட்டங்கள் குறித்தும் நீதிமன்றங்களில் வழக்குகள் எப்படி தொடர வேண்டும் என்பதை பற்றியும் அயோடின் உப்பின் அவசியத்தையும் அயோடின் உப்பை கண்டறியும் எளிமையான முறைகள் பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

மாநிலச் செயலாளர் S. சிவகுமார் அவர்கள் BIS CARE செயலி குறித்தும் அதன் பயன் குறித்தும் மாணவர்குக்கு எடுத்து கூறினார். BIS CARE செயலி மூலம் ISI தரத்தை அறிந்து கொள்வது மற்றும் தங்க நகைகள் வாங்கும் பொழுது HUID சரி பார்ப்பது எப்படி என்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். நிறைவாக காரைக்கால் தெற்கு தொகுதி நிர்வாக குழு உறுப்பினர் க.பார்த்திபன் அவர்கள் நுகர்வோர் என்றால் என்ன அவர்களின் கடமை மற்றும் உரிமை குறித்து பேசினார்.

நெடுங்காடு தொகுதி தலைவர் சுபாஷ் அவர்களும் செயலாளர் அருள் பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தெற்கு தொகுதி நுகர்வோர் நிர்வாக குழு உறுப்பினரும் ஜவஹர்லால் நேரு மேல்நிலை பள்ளியின் ஆசிரியரும் J. செழியன் மற்றும் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஆர்.குமரன் அவர்களும் ஜி.எஸ்.எஸ். திட்ட அலுவலர் உமா மகேஷ்வரி அவர்களும் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *