கரூர் செய்தியாளர் மரியான் பாபு
Green Hood kids-day care பள்ளி உலக சாதனை..
கரூர் கோவை செல்லும் சாலை, சென்னை சில்க்ஸ் அருகில்,LGB நகரில் Green Hood Kids School மற்றும் Day Care-பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளார்.இதில் 4 வயது பள்ளி (Pre-KG) மாணவி அ.மகாசினி, அர்ஜுனா உலக சாதனைகள் (Arjuna World Records) பதிவில், 100 நிமிடத்தில், 100 மீட்டர் புரொபஷனல் இன்லைன் ஸ்கேட்டிங் வளையத்தில் 186 சுற்றுகள் (லேப்ஸ்) ஸ்கேட்டிங் செய்து,18.6 கி.மீ தூரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்,
13கிலோ வெயிட் லிப்டிங்-ல் 3வயது ஹேவந்திகா ஸ்ரீ, 63 நாயன்மார்களின் பெயரை 61 வினாடிகளில் கூறிய 5வயது தாரணிகா தாஸ், 63 நாயன்மார்களை 79 வினாடிகளில் கூறிய 4வயது ஸ்ரீநாத், 60 தமிழ் வருடங்களை 40 வினாடிகளில் கூறிய 3வயது நிரஞ்சன், மூன்றாம் கண் திறன் (ப்லைன்ட் ஃபோல்டிங்) கண் கட்டிப் போட்டியில் 9வயது தியராதாஸ் என மொத்தம் ஆறு மாணவர்களும் Green Hood Kids – Day Care பள்ளியின் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பாராட்டும் விதமாக கரூர் மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ள முருகன் ரெசிடென்சி ஹோட்டலில் நடந்த பாரதி விழாவில் மாணவர்களுக்கு அர்ஜுனா வேர்ல்ட் ரெக்கார்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அரசு குழும கல்வியகங்களின் தலைவர் டாக்டர் பி. நடேசன் வழங்கினார்.
மேலும் இப்பாராட்டு விழாவில் பள்ளியின் தாளாளர் ஜே.எப்.எம் சாந்தி ஜெயராமன்,
கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா,பிராட்டிகா லாட்டெக்ஸ் மெட்ரஸ் தலைமைச் செயல் அதிகாரி சேமியா சேகர்,மினிபாரத் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் எம்.மணிவேல், பிக்சல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இ-டச் சால்யூஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி பி. பாலசந்தர்
ஆகியோர் இச்சாதனை பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.மற்றும் இவ்விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.