கடலூரில் தமிழ்நாடு ஹோட்டல்கள், மாவட்ட ஹோட்டல்கள், பேக்கரி, ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட நம் குடும்பங்களின் ஒருங்கிணைப்பு விழா..
கடலூரில் தமிழ்நாடு ஹோட்டல்கள் மாவட்ட ஹோட்டல்கள் பேக்கரி ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் ஆகிய சங்கங்களின் நம் குடும்பங்களின்ஒருங்கிணைப்பு விழா மாநில தலைவர் வெங்கட் சுப்பு, மாநில செயலாளர் சீனிவாசன், மாநில பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கடலூர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், மாநில இணை செயலாளர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் கடலூர் மாவட்டம், மாநகரம், பகுதி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
மாவட்டத் தலைவராக கார்த்தி ராஜ், செயலாளராக சரவணன், பொருளாளராக சீனிவாசன், துணைத் தலைவர்களாக ராஜா, ஸ்ரீதர். துணை செயலாளர்களாக பிரபு, சுதாகர். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சஞ்சய் ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாநகர தலைவர் செயலாளர் பொருளாளர் துணைத் தலைவர்கள், துணை செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்று கொண்டனர்.