தேனி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள பொதுமக்களின் நன் மதிப்பை பெற்ற மிக சிறந்த கல்வி நிறுவனமான அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி தலைமை வகித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் வெ. கணேசன் திமுக பொதுக்குழு உறுப்பினர் சசி இளநிலை உதவியாளர் வாசிமலை பள்ளி தலைமை ஆசிரியர் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.