வால்பாறை கல்லார் மலைக்கிராமம் தெப்பக்குளம் மேடு பகுதி குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு அமைக்க கிராம சபா தலைவரிடம் கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கல்லார் மலை கிராமம் தெப்பக்குளமேட்டில் நகராட்சி ஆணையாளர் குமரன் தலைமையில் கிராம சபா கூட்டம் வட்டாட்சியர் அருள் முருகன், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகரத் துணைத்தலைவர் செந்தில் குமார், நகராட்சி பொறியாளர் ஆறுமுகம், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது
முன்னதாக அக்கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது அதைத்தொடர்ந்து கல்லார் செட்டில்மென்ட் வன உரிமைத் தலைவர் ராஜேஸ்வரி மனுவின் படி வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சின்கோனா, கல்லார் தெப்பக்குளம் மேடு,உடுமன்பாறை, சங்கரன் குடி மற்றும் பரமன் கடவு ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு 2006 வன உரிமை சட்டப்படி தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் தேவையான வளர்ச்சி பணிகளை செய்து கொடுப்பதற்கும் குறைகளை கேட்டறிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
முன்னதாக ஐந்து கிராமசபா தலைவர்களின் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது மேலும் தெப்பக்குளம் மேடு பகுதியில் நகராட்சி மூலம் தெருவிளக்கு அமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை, நகர்மன்ற உறுப்பினர்கள் 21 வது வார்டு உமா மகேஸ்வரி,20 வது வார்டு மாரியம்மாள், 19 வது வார்டு பால்சாமி, அப்பகுதி பழங்குடியின மக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாகக் கலந்து கொண்ட நிலையில் வன உரிமை தலைவர் ராஜேஸ்வரி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து சிறப்பித்தார்