100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக-வை கண்டித்து திமுக சார்பில் கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் திராவிட முன்னேற்ற கழகம் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, திமுக கழக இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும்,ஒத்து ஊதும் அதிமுக-வையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட கழக செயலாளர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.இந்த கண்டன இந்த ஆர்ப்பாட்டத்தில்,மாநில நிர்வாகிகள்,மாவட்ட, மாநகர நிர்வாகிகள்,ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்,வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள்,நிர்வாகிகள்,அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.