புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை அதிரடி விதிகளை மீறினால் வாகனம் பறிமுதல் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன் ஆலோசனையின் படி தூத்துக்குடி நகரில் போக்குவரத்து காவல்துறை இன்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகரில் இரு சக்கர வாகனத்தில் அதிக சத்தம் தரக்கூடிய சைரன் வாகனங்கள். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டினால். இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர்களுக்கு மேல் வாகனத்தில் சென்றால். இருசக்கர வாகனத்தில் அதிகம் சத்தம் தரக்கூடிய ஹார்ன் அடித்துக் கொண்டு சென்றாலும் அதுபோல சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றாலும் நடு இரவில் பைக் ரேஸில் ஈடுபட்டாலும் இரு சக்கர வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபதாரத் தொகை வசூலிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இன்று போக்குவரத்து காவல்துறையினர் மாநகர் பகுதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் காசிராஜன். சண்முக பாலன். வெங்கடேசன் ஆகிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் மேல பெரிய காட்டன் ரோட்டில் விதிகளை மீறிய இருசக்கர வாகனங்கள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்தி விதிகளை மீறிய இருசக்கர வாகனங்களுக்கு அபதாரத் தொகை விதிக்கப்பட்டது இரண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
ஆகையால் இன்றும் நாளையும் ஆங்கில புத்தாண்டு அன்றும் இருசக்கர வாகனங்களில் மாநகர பகுதியில் எங்கு சென்றாலும் விதிகளை மீறினால் உடனடியாக இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். ஆகையால் இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் விதிகளை மீற வேண்டாம் இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது என்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.