தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

மத்திய பிரதேசம் படகு கவிழ்ந்த விபத்தில் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர் பலி. இரண்டு குழந்தைகள் தமிழ் இனியா மற்றும் பூவிதரன் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரிமேல் அழகன் 40 இவரது மனைவி சத்யா என்கின்ற சௌபாக்கியம் 35. பரிமேல் அழகன் கோவையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது பெண் குழந்தை தமிழ் இனியா வயது 12 இவர்களது மகன் மயூரான் வயது 7.

சௌபாக்கியத்தின் மாமனார் வடிவேல் 78 மூலனூர் பகுதியில் கல்வி சூப்பரண்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் வயது 70

இந்நிலையில் வடிவேலின் மகள் கார்குழலி 38 இவர் திருச்சியை சேர்ந்த காமராஜ் 40 என்பவரை திருமணம் செய்து கொண்டார். காமராஜ் மத்திய பிரதேசம் பகுதியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சுற்றுலாவிற்காக மூலனூரில் இருந்த சௌபாக்கியம் கோவை சென்று கோவையிலிருந்து விமான மூலம் வடிவேல் மாரியம்மாள், சௌபாக்கியம் , தமிழ் இனியா , மயூரான் ஆகியோர் கோவையில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு சுற்றுலாவிற்காக சென்றனர்.

காமராஜ்,கார்குழலின் குழந்தைகள் பூவிதரன் 10, தமிழ் வேந்தன் 5 ஆதியோர் ஏற்கனவே மத்தியபிரதேசத்தில் இருந்தவர்கள்.

மத்திய பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் ஜபல்பூர் படகு சவாரி செய்தனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சௌபாக்கியம், கார்குழலி, காமராஜ், மயூரான், தமிழ் வேந்தன் ஆகியோர் நடைபெற்ற படகு விபத்தில் உயிரிழந்தனர்.

மேலும் இந்த படகு விபத்தில் தமிழ் இனியா மற்றும் பூமிதரன் ஆகியோர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *