திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன் தலைமையில் கீழவிடையல், மேலவிடையல்,புங்கஞ்சேரி, தொழுவூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி வலங்கைமானில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம் எல் ஏ முன்னிலையில் தங்களை அதிமுக வில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வலங்கைமான் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் குமாரமங்கலம் கே.சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வாசுதேவன், நகரச் செயலாளர் சா.குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணிசெயலாளரும், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய.இளங்கோவன், நகர அவைத் தலைவர் ரத்னகுமார், நகர பொருளாளர் எஸ்.அருள்முருகன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் விடையல் சங்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *