புதுச்சேரியில் ஜி20 மாநாடு நேற்று நடந்தது. இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 70 பேர் பங்கேற்றனர். இதில் உலகளாவிய சுகாதாரம், இதில் அறிவியல் குறித்த கலந்தாய்வு நடந்தது.
ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்கள் என தேர்வு செய்து 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதில் இருந்து உறுப்பு நாடுகளின் பல நிலைகளிலான கூட்டம் இந்தியாவின் பல நகரங்களில் நடத்தப்படு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக அறிவியல்-20 ஆரம்ப நிலைக் கூட்டம் நேற்று புதுச்சேரி முதலியார்அபட்டையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தொடங்கியது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் ஜி.ரங்கராஜன் வரவேற்று பேசியதாவது; ஜி20 நாடுகளின் இலக்குகளை அடைவதற்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மிக முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன. இன்றைக்கும் நாளைக்கும் மிகப் பெரும் பிரச்சனகளாக இருக்கின்ற பருவ நிலை மாறுதல், பெருந்தொற்றுப் பரவல், எரிசக்தி பாதுகாப்பு, நீர் மேலாண்மை, உணவு பற்றாக்குறை போன்றவற்றை ஒரே ஒரு நாடு மட்டும் தன்னளவில் தீர்த்துவத்துவிட முடியாது. இதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியமாகும் என்றார்.
அறிவியல்-20 இன் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா துவக்கவுரையில்; அழகான புதுச்சேரி நகரில் நடைபெறும் அறிவியல்20 ஆரம்ப நிலைக் கூட்டத்துக்கு வந்துள்ள ஜி 20 நாடுகளின் விஞ்ஞானிகள், பல்வேறு இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகளை அன்புடன் வரவேற்கிறேன். உலக அளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மதிக்கின்ற பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமை மிக்க நிகழ்வாகும். அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமே பங்காற்றவில்லை. கூடுதலாக சமூக சீர்திருத்தங்களுக்கும் அறிவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியால்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது,
”அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகின்றன. உலகை ஒருங்கிணைக்கின்றன் மற்றும் அமைதியை முன்னெடுக்கின்றன” என்று பிரதமர் திரு, ந்ரேந்திர் மோடி கூறியுள்ளார். அறிவியலின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புக்கு பிரதமரின் கூற்று அணி சேர்ப்பதோடு உலகத்தின் எதிர்கால நம்பிக்கைக்கும் வழிவகுக்கின்றது. பல தரப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுடன் அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தாககங்களை நமது சொந்த நாட்டிலும் நாட்டெல்லை கடந்து உலக அளவிலும் முன்னெடுப்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். நாம் எதிகாலம் குறித்தும் விவாதிக்க உள்ளோம்.


இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சியின் வசதிகளைப் பெற்று வளர்கின்ற தலைமுறையாக உள்ளது. இளைஞர்களின் எண்ணணிக்கை மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிக்கின்றது. இன்று பிறக்கின்ற குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறந்தவர்கள், பிறக்கின்றவர்கள். எனினும் எதிர்கால தலைமுறைக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. நமது வீடுகள் டிஜிட்டல் மயமாகி விட்டன. நமது வாழ்க்கையும் டிஜிட்டல் மயமாகின்றது. ஆனாலும் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்பட்டு வருகின்றன. நாம் முன்வைத்துப் பேசுகின்ற பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவியல் தொழில் நுட்பம் என்பது புதிய தீர்வுகளைத் தரக்கூடியது.
இன்றைய ஆரம்ப நிலைக் கூட்டத்தின் இலக்கு என்பது இனி தொடர்ந்து நடைபெறக்கூடிய கூட்டங்களுக்கான கருத்துவரைவை உருவாக்குவதுதான். அறிவியல் உச்சிநிலை கூட்டம் கோயம்புத்தூரில் நடைபுறும் என்று பேராசிரியர் அஷுதோஷ் ஷர்மா இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் உலகளாவிய சுகாதாரம், பசுமையான எதிர்காலத்துக்கு தேவையான தூய ஆற்றலை பெறுதல், அறிவியலை சமூகம் மற்றும் கலாசாரத்துடன் இணைத்தல் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலை வரை மாநாடு நடந்தது. பின்னர் மாநாட்டு பிரதிநிதிகள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இன்று ஆரோவில் சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களை வரவேற்று புதுச்சேரி நகரம் முழுவதும் அரசு சார்பில் முக்கிய சாலைகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்கு என்று தனித்து அமைக்கபட்டுருந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *