புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி 2022-2023 பட்ஜெட் உரையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,64,847 பயனாளிகள் பயன்பெற்று வந்த நிலையில் ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை நிலுவையில் உள்ள 16,769 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2023 ஜனவரி மாதம் முதல் பயன் பெற இருக்கின்றனர் இதன் தொடர்ச்சியாக தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட 350 புதிய பயனாளிகளுக்கு நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.
இவ்விழாவில் மகளிர் மற்றும் மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *