புதுச்சேரி பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- உலகத்தில் வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு வழிகாட்டும் தலைமை பொறுப்பை உலகின் சக்தி வாய்ந்த நமது பாரதப் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இந்த வருடம் பெற்றுள்ளது.
ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற கருத்தை நமது பாரத பிரதமர் மோடி மாநாட்டின் வாயிலாக உலகிற்கு உணர்த்துகிறார். நம் நாடு முழுவதும் 200 இடங்களில் ஜி 20 மாநாடு நிகழ்வுகள் நடக்க உள்ள நிலையில் பாரதப் பிரதமர் புதுவை மாநிலத்தில் நடைபெற தேர்வு செய்தமைக்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டு நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள 20 நாட்டின் பிரதிநிதிகளையும் 9 நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்களையும் வரவேற்கிறேன். 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளுடன் வியாபார தொடர்பு கொண்டு வேதபுரி என்று அழைக்கப்பட்ட புதுவையின் பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க கோவில்கள், புகழ்பெற்ற கட்டிடங்கள் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் உலக அளவில் சிறப்பு வாய்ந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தெரிந்து கொள்வதற்கு இங்கு நடைபெறும் மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *