புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதி பாப்பாஞ்சாவடியில் கழிவுநீர் வாய்க்கால் சிலாப் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட பாப்பாஞ்சாவடி பகுதியில் ஓட்டாம்பாளையம் சாலையில், கழிவு நீர் செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்களின் முயற்சியால் அந்த பகுதியில் சேதமடைந்த சிமெண்ட் சிலாப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக சிலாப் அமைக்கும் பணிகள் புதுச்சேரி நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் திமுக தொகுதி செயலாளர் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, துணை செயலாளர் அங்காளன் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், தர்மராஜ், இரமணன், சுப்பிரமணி, சபரிநாதன் மற்றும் பாப்பாஞ்சாவடி ஊர் முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், மணி, இபேர், முருகன், வச்சிரவேலு, வரதராஜ் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *