இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் (RRC),YRC, NSS மற்றும் ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து நடத்திய 12 ஆம் ஆண்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இந்த இரத்ததான முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இரத்த வகை அறிதல் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த முகாமில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் வழங்கினர்.


இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மணிமொழி, எழிலன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மணிமேகலை,செஞ்சிலுவைச் சங்க (YRC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வம் மற்றும் பேராசிரியர்கள் சரவணன், சர்மிளா செல்வி, கண்ணகி, ஆனந்தஜோதி, ராஜபாண்டி உட்பட ஏராளமான மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *