வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடத்தபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ,போக்குவரத்து காவலர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
சென்னை வண்டலூர் அடுத்த கொளபாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்,
இதில் வண்டலூர் சாலை சந்திப்பில் கூடிய 100க்கு மேற்பட்ட மாணவிகள் தலைகவசம் அணிவதின் அவசியம்,மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்ட கூடாது,செல்போன் பேசி கொண்டு வாகனத்தை ஓட்ட கூடாது போன்ற போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்திய படி போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,
அப்போது பேசிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன,தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டினாள் விபத்தின் போது ஏற்படும் விபத்துகள் குறித்தும்,அதற்கான அபராத தொகை செலுத்துவது அதே போல் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது ,செல்போன் பேசிய படி வாகனம் ஓட்டுவது அதற்கா விதிக்கபடும் அபராத தொகை குறித்து மாணவிகளிடம் விளக்கி தெரிவித்தார்,
மேலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தங்களின் குடும்பத்திற்க்கும் நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு மாணவிகளிடம் அறிவுறுத்தினார்.