திருலைமாறு ஒளவை மழலையர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா.
திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா மற்றும் அழகு குழந்தைகளின் ஒப்பனை போட்டி ஆகியவை வெகு விமர்சையாக நடைபெற்றது
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அரிமா வை. கலிய பெருமாள் தலைமை தாங்கினார். ஒளவை அறக்கட்டளைச் செயலர் முகில் வேந்தன் முன்னிலை வகித்தார்.ஆசிரியர் கலை அருவி வாழ்த்துரையாற்றினார்.பள்ளித்தலைமை ஆசிரியர் கோகிலா வரவேற்றார்..
விழாவில் பள்ளி குழந்தைகளுக்கிடையே பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, ஆத்திக் ஆடி. கொன்றை வேந்தன் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி, கதை சொல்லும் போட்டி நடைப் பெற்றது.தொடர்ந்து போட்டியில் வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு முற்பகலில் பாலக்காடு ஐஐடி தொழில் நுட்ப வல்லுநர் இரஞ்சித்குமார் அவர்களும், பிற்பகலில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருக்காட்டுப்பள்ளி முனிய நாடார் மருத்துவமனை மருத்துவர் வசந்தகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டுரை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளிக்குழந்தைகள் திருவள்ளுவர். ஒளவையார், பாரதியார். ஆண்டாள், இராஜராஜ சொழன், முருகன், திருஷ்ணன் வேலு நாச்சியார் பரமசிவன், ஐயப்பன் போன்ற பல்வேறு வேடங்களில் அணிந்து தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளின் நடுவராக ஆசிரியர் நந்தினி குழந்தைகளை தேரிவு செய்தார். ஆசிரியர் வினோதினி நன்றி கூறினார். ஆசிரியர்கள் மேரி வெர்ஜினியா. தீபா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் கண்ணகி மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.