செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவிகளின் நலன் கருதி அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சத்து
10 ஆயிரம் மதிப்பில் கணினி ஸ்மார்ட் போர்டு வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

ராம் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மவுண்ட்டின் முன்னால் தலைவர் ஏ.கே.எஸ்.ராம ராமமூர்த்தி ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மவுண்ட் தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகள் இடையே சிறப்புரையாற்றி கணினி ஸ்மார்ட் போர்டு வழங்கினர்.

இந்நிகழ்வில் அச்சிறுபாக்கம் ரோட்டரி கிளப் தலைவர் எம்.வெங்கடேஷ்,செயலார் உத்தமன்,பொருளாளர் ராமமூர்த்தி,அச்சிறுப்பாக்கம் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் பாலாஜி, வேணுகோபால், சேகர், பாபு,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்புநாயகி,
துணை தலைமை ஆசிரியர் கௌரி ரவிச்சந்திரன்,தேன்மொழி உட்பட ஆசிரியர்கள்
மகாலட்சுமி, உஷாராணி, சித்ரா,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *