கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர் கரூரில் 90ஆவது மகா சிவஜெயந்தி. விழாவினை முன்னிட்டு சிவனும் நானும் சிவனுடன் சில நேரம் என்ற நிகழ்விற்கான அமைதி ஊர்வலத்தை நடத்தினர்.
கரூர் DSP செல்வராஜ் ,பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் கரூர் மாவட்ட பொறுப்பு சகோதரி B.K.சாரதா கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்கள்.பிரம்மா குமாரிகள் இயக்கத்தினர், கல்லூரி மாணவியர்கள் 90 பேர் உட்பட150 மேற்ர்பட்டோரர் கலந்துகொண்டனர். அமைதி ஊர்வலம் அலங்கார் லாட்ஜ் முன்புறம் ஆரம்பித்து ஜவஹர் பஜார், தைலா சில்க்ஸ்,பழைய அரசு மருத்துவமணை சாலை வழியாக திண்ணப்பா கார்னர், செங்குந்தபுரம் மெயின்ரோடு வழியாக.7ஆவது கிராஸில் அமைந்துள்ள ராஜயோக தியான நிலையம் வரை நடைபெற்றது.தியான நிலையத்தில் சிவ பரமாத்மாவின் கொடி ஏற்றப்பட்டு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட. 1008 மணி நேர தியான அறையில் DSP. செல்வராஜ், சிவாச்சாரியார்,B.K.சாரதா சகோதரி, B.K.பரமேஸ்வரி சகோதரி மற்றும் B.K.அம்மையப்பன் ஆகியோர் விளக்கேற்றி வைத்தனர். அனைவரும் பிரத்யேக தியான அனுபவ அறையில் அமர்ந்து தியானம் செய்தனர்.