கோவை மாவட்டம் வால்பாறையில் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிர்கள் அனைவருக்கும் பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான முன் பணமாக ரூ.3 ஆயிரம் ரூபாயும் மற்றும் கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் ரூபாயும் மொத்தம் ரூ.5 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் அதிகாலை வரவு வைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வால்பாறை நகர திமுக சார்பாக நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ஈ.கா.பொன்னுச்சாமி, அவைத்தலைவர் செல்லமுத்து, நகர துணைச்செயலாளர் சரவண பாண்டியன், முன்னாள் நகர செயலாளர் த.பால்பாண்டி, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், எல்.பி.எப்.சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் நிர்வாகிகள் அம்பிகை சுப்பையா, ஜெயராம் என்ற கிருஷ்ணமூர்த்தி, மீசை குமார், எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ், குட்டி என்ற தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட, நகர, மகளிரணி, சார்பு அணி, வார்டு கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
13.02.2026

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *