கோவை
கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “அல்கோரிதம் 26” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொழில்நுட்ப நிகழ்வுகளாக டிஜிட்டல் எஸ்கேப் ரூம், பேப்பர் பிரசன்டேஷன், கோட் பேட்டில் ராயல், மினி ஹேக்கத்தான், ரிவர்ஸ் இன்ஜினியரிங், மாஸ்டர் தி ப்ராம்ப்ட் ஆகியவை நடைபெற்றன.
தொழில்நுட்பம் சாராத நிகழ்வுகளாக சோலோ டான்ஸ், குரூப் டான்ஸ், ஸ்க்விட் கேம் ஆகியவை நடைபெற்றன. மிட்டாய்க்கடை மற்றும் ஸ்நாக் ஸ்ட்ரீட் போன்ற சிறப்பு ஈர்ப்புகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், தங்களின் திறமையை வெளிப்படுத்தி, புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டனர். இந்நிகழ்வின் மூலம், மாணவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி பெற்றது. கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கீதா, இந்நிகழ்வின் வெற்றிக்கு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளி அறிவுத்திறன் மற்றும் தரவு அறிவியல் துறை தலைவர் முனைவர் கே.பிரதீபா, தரவு பகுப்பாய்வுடன் கணினி அறிவியல் துறை தலைவர், மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.