திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்ட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலய 142வது ஆண்டு திரு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் புனித அந்தோனியார் ஆலய பங்கு அருட் தந்தை.ஜெயசீலன் அவரது தலைமையிலான சிறப்பு திருப்பலியுடன் வருவாய் கோட்டாட்சியர். திருமலை ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்தார்.

இதில் கிழக்கு தாலுகா தாசில்தார். ராஜேந்திரன்,ஆர் ஐ.வினோத்,வி ஏ ஒ.அரவிந்த் ஆகியோருடன் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர்.வெள்ளிமலை,ஜெயராமன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.சித்ரா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் திண்டுக்கல்,தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 900 க்கும் மேற்பட்ட காளைகள்,400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஊர் பொதுமக்கள் சார்பில்,உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில்,முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.இந்த போட்டியைக் காண சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து இப்போட்டியினை கண்டு களித்தனர்.

இவ்விழால் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். உலகநாதன் அவரது தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.ராஜ் அவரது தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் விழாக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *