வைரத்தின் மீது முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்-இயக்குனர் நிசாம் மொஹைதீன்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜன.17-
தஞ்சை ரூஜாஸ் ஆண்டவர் வைரம் – தங்க நகைகள் மொத்த விற்பனை நிர்வாக இயக்குனர் நிசாம் மொஹைதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிஸ்னா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சார்பில் வைர நகை மற்றும் தங்க நகைகள் சில்லறை விற்பனையை தமிழ்நாட்டில் விரிவுபடுத்தி உள்ளது அதன்படி தஞ்சை காந்திஜி சாலை மாநகராட்சி வணிக வளாகத்தில் ரூஜாஸ் ஆண்டவர் நகைக் கடையில்
நிறுவனத்தில் புதிய ஷாப்பின் ஷாப் அவுட்லெட்டை தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப சான்றொளிக்கப்பட்ட
வைர நகைகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் நுணுக்கமான கைவினைத்திறன் காரணமாக பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.
மணமகள், பண்டிகை மற்றும் தினசரி அணிகலன்களுக்கு ஏற்ற விரிவான வைர மற்றும் தங்க நகைத் தொகுப்புகளை வழங்கி, உயர்தர விற்பனை அனுபவத்தை வழங்கும் நோக்குடன் இது செயல்படுத்தப் பட்டு உள்ளது.
உயர்தரமான, சான்றளிக்கப்பட்ட வைர மற்றும் தங்க நகைகளை இந்தியா முழுவதும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம். தஞ்சாவூர் வாடிக்கையாளர்கள் கிஸ்னா வழங்கும் தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த வடிவமைப்புகளை நிச்சயம் பாராட்டுவார்கள் என்று நம்புகிறோம்.
கிஸ்னா போன்ற நம்பகமான மற்றும் சிறந்த பிராண்டுடன் இணைந்து நகை வியாபாரம் செய்வது எங்களுக்கு பெருமையாகும்.
மேலும்
இந்த கூட்டாண்மை மூலம் சான்றளிக்கப்பட்ட வைர நகைகள் மற்றும் நவீன தங்க நகைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிகிறது. தஞ்சாவூர் மக்களுக்கு சிறந்த நகை வாங்கும் அனுபவத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
புதிய எஸ்.எஸ்.ஐ. அவுட்லெட்டில் 100 சதவீதம் சான்றளிக்கப்பட்ட வைர நகைகள் மற்றும் பாரம்பரியம் மற்றும் நவீனத்தை ஒருங்கிணைக்கும் அழகிய தங்க நகைகள் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விழாவிற்கு நகைக்கடை நிர்வாக இயக்குனர் நிசாம் மொகைதீன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிஸ்னா வைரம் மற்றும் தங்க நகை தலைமை செயல் அதிகாரி பராக் ஷா கலந்து கொண்டு வைர நகை முதல் விற்பனை தொடங்கி வைத்தார்.கிஸ்னாவின் மாநிலத் தலைவர் ஹரிஹரன், வணிக இனைவர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.