தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் ரோட்டில், தனியாா் ஹோட்டல் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கடந்த 47 ஆண்டுகளாக 3 தனிநபர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து செய்து வந்தது மேயா் ஜெகன் பொியசாமிக்கு தெரியவந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் இது தங்களது இடம் என்றும், நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி ஆவணங்களை ஆய்வு செய்ததில் அது மாநகராட்சி நிலம் என்பதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாலை, எட்டயபுரம் ரோடு- தனியாா் அகாடமி வடபுறம் மீனாட்சிபுரம் கண் மருத்துவமனை வழியாக ஜெயராஜ் ரோடு வரை செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. பல கோடி மதிப்புள்ள இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்களில் ஒருவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 3ம் கேட் மேம்பாலம் கீழ்,தனியாா் மருத்துவமனை அருகே பாலடைந்த கட்டிடம் ஒன்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையும் ஆய்வு செய்து அங்கு சாலை அமைக்கும் பணியும் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால், மீனாட்சிபுரம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை எளிதாக சென்றடைய முடியும் என்பது குறிப்பிடதக்கது.

இந்தபகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அடைத்து வைத்திருந்ததை முழுமையாக கண்டறிய சுவா் ஏறி குதித்து அப்பகுதியை பாா்வையிட்டது. தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.
ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், மின்வாாிய தொழிற்சங்க தலைவா் பேச்சிமுத்து, மேயாின் ேநா்முக உதவியாளர் ரமேஷ், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *