கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ் கனி,பைத்துல் மால் ஒருங்கிணைப்பாளர் இதாயத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கி பைத்துல் மால் துவக்க விழா, தமிழக அரசின் காமராஜர் விருது பெற்ற பைத்துல் மால் ஃபெடரேஷன் ஒருங்கிணைப்பாளர் எஸ் எம் இதயத்துல்லா அவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது..
ஆடிட்டர் முகமது கலீமுத்தீன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சமூக நீதி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் முகமது ரஃபீக் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி உமர் கத்தாப் ஆகியோர் கலந்து கொண்டனர்..
விழாவில் பைத்துல் மால் துவக்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு ஜமாஅத் பைத்துல் மால் ஃபெடரேஷன் ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவருமான எஸ்.எம். இதாயத்துல்லா பேசுகையில்,ஏழைகளுக்கு உதவுவது என்பது ஒரு தானமாக இல்லாமல் கடமையாக இருக்க வேண்டும் என்பதே ஜகாத் வசூல் என குறிப்பிட்டார்..

அது போன்று ஜகாத் பெறப்பட்ட நிதியை ஏழை மக்களின் சமூக முன்னேற்ற வளர்ச்சிக்கு பயன்படுத்துவதே பைத்துல் மால் நோக்கம் என தெரிவித்தார்…

தொடர்ந்து புதிய பள்ளி வாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு கல்வெட்டை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான நவாஸ் கனி துவக்கி வைத்தார்..

முன்னதாக விழாவில் பேசிய அவர்,தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பேசிய அவர்,இதனால் அனைத்து சமுதாய மக்களும் பயனடைவதாக தெரிவித்தார்..

நிகழ்ச்சியில், தி.மு.க.கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி,பொறியாளர் ஆர்.கே.ரவி,அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் ,நூருல் அமீன்,சாதிக் பாட்ஷா, ஜான் பாஷா,ராஜா முகம்மது,அப்துல் ஜப்பார்,ஷாஜஹான்,முகம்மது ஜெய்லானி,அல்லா பாஷா,முஹம்மது ரபீக்,இமாம் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

விழாவில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு அரிசி,சமையல் எண்ணெய்,பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *