மன்னார்குடி., பிப்.16

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இரு பாலர் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் இக்கல்லூரில் கல்விபயின்று பல்வேறு துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் டி .ஆர்.பி.ராஜாவின் முயற்சியால் பெண்களுக்கு என்று தனி கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பலமுறை பேசி அதன் வாயிலாக மன்னார்குடியில் மகளிர்கென்று ஒரு அரசினர் கல்லூரி அமைய வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் கல்லூரியை துவங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மன்னார்குடி தஞ்சை சாலையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் கல்லூரி ஆனது நேமுதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மனன்னாா்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் தலையாமங்கலம் பாலு , ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் தன்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி இக்கல்லூரின் வகுப்புகளை துவக்கி வைத்தனர் .

இக்கல்லூரியில் வரலாற்று துறை, கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் துறை ,நுண்ணுயிரியல் துறை, கணினி பயன்பாட்டு துறை முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *