திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவி நமீதா தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவி நமீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.