முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில் குமார்
முதுகுளத்தூர் அருகே சோனை பிரியன் கோட்டை கிராமத்தில் 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு பெருவிழா.கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு ரசித்தனர் முதுகுளத்தூர் பிப்17 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சோனை பிரியன் * கோட்டை கிராமத்தில் 13ம் ஆண்டு மஹாசிவராத்திரி திருவிழா மற்றும் 3 ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு பெருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது 15ந்தே தி இரவு 9 மணிக்கு ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஆடல் பாடல் கலந்த கிராமிய – கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
–
நல்லிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஸ்ரீ = வீரகாளியம்மன், கட்டப்புளி முனீஸ்வரர், ஸ்ரீ சுந்தர்ராஜமூர்த்தி பேச்சியம்மன், சுபேத ஆலயங்களுக்கும் விஷேச பூஜைகள் நடைபெற்றன பால் குடம் தீட்டி, கரகம் எடுத்து வந்து பொதுமக்கள் நேற்றி கடன் செலுத்தினார்கள். பக்தர்கள் ஸ்ரீ ஆலய வளாகத்தில். பூக்குழி பேச்சியம்மன் இறங்கினார்கள். மதியம் பொதுமக்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த காளைகள் பங்குபெற்றன மாடுபிடி வீரர்களால் பிடிக்க முடியாத காளைகளுக்கு காளைகளின் பரிசு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. காளைகளை பிடித்தமாடுபிடி வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.