மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனர் உத்தரவை அவமதித்து நடக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வணிகர் சங்க அமைப்பினர் கோரிக்கை
வணிகர்களின் கடைகளை புதுப்பிக்க மாநகராட்சி கருவூலங்களில் மற்றும் ஆன்லைன் இ.சேவை மையங்களில் சென்று கட்டணம் செலுத்தும் முறை உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் தங்களை அலை கழிப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்…
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வணிகம் செய்வதற்கு டிரேடர்ஸ் உரிமம் எடுப்பது அவசியமாக உள்ள நிலையில், .கடந்த ஆண்டுகள் வரை வருடந்தோறும் உரிமத்தை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரை சந்தித்து அப்ரூவல் பெற்று உரிமத்தை புதுப்பித்து வந்தனர்..
இந்த நடைமுறையில்,வணிகர்களிடம் பெரும் தொகையாக கையூட்டு கேட்கப்படுவதால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் கோரிக்கையை ஏற்று, அண்மையில் வியாபாரிகள் பயனடு பயனடையும் வகையில் நேரடியாகவே மாநகராட்சி கருவூலங்களில் மற்றும் ஆன்லைன் இ… சேவை மையங்களில் சென்று கட்டணம் செலுத்திக் கொள்ளும் நடைமுறையை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்தது…
இந்நிலையில் தற்போது மாநகராட்சி உரிமம் புதுப்பிக்க ஒவ்வொரு மண்டலங்களில் சென்று பணம் செலுத்த சென்றால் மண்டல அலுவலகங்களில் பணம் வாங்காமல் வார்டு சுகாதார ஆய்வாளர்களை சென்று பாருங்கள் என அலைகழிப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்…
இது தொடர்பாக , தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாநகர மாவட்ட தலைவர் லிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க கருவூலங்களில் நேரடியாகவே சென்று பணம் செலுத்த கமிஷனர் உத்தரவு பிறப்பித்த நிலையில்,அதிகாரிகள் கருவூலங்களில் சர்வர் பிரச்சினை கம்ப்யூட்டர் பிரச்சனை என்று எங்களை ஏமாற்றி வருவதாக தெரிவித்தார்..
இதனால் வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி இருப்பதாக கூறிய அவர், கமிஷனரையும் மேயரையும் வார்டு அதிகாரிகள் அவமதித்து வருவது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது..
எனவே இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் விரைவாக தலையிட்டு யாருடைய நிர்பந்தமும் இன்றி மாநகராட்சியில் எந்த கருவூலத்திலும் ஆன்லைனிலும் இ. சேவை மையம் மூலமும் வணிகர்கள் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்..
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாநகர மாவட்ட பொருளாளர் மெடிக்கல் விஸ்வநாதன், மாநில இணைச் செயலாளர் ஜான்சன், கோவை மாநகர மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.வில்சன் ஆகியோர் உடன் இருந்தனர்…..