திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகாகான 5ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக ரூபாய் 18 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு கலந்துகொண்டு துறையூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் அருணாசலம், பேராசிரியர்கள் டாக்டர் ராஜதுரை,டாக்டர் டேவிட், டாக்டர் சுதாகர், டாக்டர் சுகிர்தா, கண்காணிப்பாளர் சாந்த ஷீலா,மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ்,நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை,சிவ சரவணன், முத்துசெல்வன், அசோகன்,கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,நகர் மன்ற தலைவர் செல்வராணி,பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன்,வெள்ளையன்,பொதுக்குழு கிட்டப்பா,பூபதி,அரசு வழக்கறிஞர் ஜெயராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ரெங்கநாதபுரம் கார்த்திக், கண்ணனூர் குமார், நடுவலூர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேஸ்வரி ரவிச்சந்திரன், சண்முகம், காவேரி கணேசன், தமிழ்செல்வன்,கிருபா,செல்வி பாஸ்கர், நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், சுதாகர், முத்து மாங்கனி பிரபு, சுமதி மதியழகன், மெடிக்கல் பிரேம், ஒன்றிய இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார்,தமிழ் அழகன், வழக்கறிஞர் தமிழ்செல்வன்,18 வது வார்டு மோகன்,சசிகுமார் மற்றும் மாணவ மாணவிகள், கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஒப்பந்ததாரர் நாமக்கல் அருண்குமார் நன்றி கூறினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்