திருவையாறு அருகே கண்டியூரில் உசிலம்பட்டி ஆர்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதலின்படி கல்லூரி இயக்குநர் பாண்டியராஜன் அறிவுறுத்தலின் படி நடந்தது. தஞ்சை காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர் ரவிச்சந்தர், எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய வளர்ச்சி அலுவலர் சிலம்பரசன் ,திட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் , வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், மண் பரிசோதனை, நீர்வள மேலாண்மை, இயற்கை விவசாயம், உயிர்சத்து உரங்களின் பயன்பாடு, மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் விவசாயிகள்
எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மாணவிகள் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்து அரசு வழங்கும் வேளாண் மானியங்கள், பயிர் காப்பீடு திட்டங்கள், மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவிகள் ஸ்ரீகிரியா ரூபிணி , சுவேதா,ஸ்வாதி, மெடோனா, வைஷ்ணவி ,வஜிகா,வாணி ஸ்ரீ, வர்ஷா,வெனிஸ்மா இன்பன்ட்,வித்யதர்ஷினி, யாழினி மற்றும் விவசாயிகள் அமைப்பு செயலாளர் பஞ்சாபிகேசன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க திருவையாறு ஒன்றிய தலைவர் ஹரிஷ், விவசாயிகள் சங்க பிரதிநிதி கண்டியூர் ரவி, பிஜேபி மாவட்ட நிர்வாகி பிரியங்கா, முருகேசன், ரிஜோ திருமண மண்டப மேலாளர் ஆக்ஷ முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்