எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் சீர்காழி தாலுகா முழுவதிலும் இருந்து திமுக மகளிர் அணி சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மகளிர் அணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் மகளிர் அணியினர் எவ்வாறு சென்று வாக்கு சேகரிப்பது என காணொளி காட்சி மூலம் குறும்படம் காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் நாகை வினோத்குமார் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார் மலர்விழி திருமாவளவன் பஞ்சு குமார் நகர செயலாளர் சுப்பராயன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து மகேந்திரன் ரவி இளங்கோவன் மகளிர் அணி மாவட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *